டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்

சென்னை

டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்குச் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தினமும் பெட்ரோல் மற்றும் டிசல் விலை நிர்ணயம் செய்ய அனுமதி வழங்கி உள்ளது.   இதனால் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது.

அதையொட்டி இன்று அறிவிக்கப்பட்ட விலைகளின்படி சென்னையில் பெட்ரோல் விலையில் மாறுதல் இல்லாத போதும் நேற்றும் இன்றும் தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது.

நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.58க்கு விற்கப்பட்டு இன்றும் அதே விலை தொடர்கிறது.   ஆனால் டீசல் விலை நேற்று 21 காசுகள் உயர்ந்தன.  இன்று அதைவிட 21 காசுகள் விலை உயர்ந்துள்ளது.  இன்று டீசல் விலை ரூ.70.56க்கு விற்பனை செய்யப்படுகிறது.