டீசல் வாகனம் தடை : பிபிஓ துறைக்கு ₹ 6653 கோடி இழப்பு

டீசல் வாகனம் தடை செய்யப்பட்டால் பிபிஓ துறைக்கு 6652.5 கோடி ( $ 1 பில்லியன்) இழப்பு

தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (நாஸ்காம்) படி, அண்மையில் தலைநகரில் விதிக்கப்பட்ட டீசல் டாக்சிகள் மீதான தடை இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரப்பட்டால், இந்திய பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் (பிபிஓ) துறைக்கு  பெரிய இழப்பு நேரிடும்.

“டீசல் வாடகை வண்டிகள் மீதான தடை இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நீடித்தால், பிபிஓ துறைக்கு $1 பில்லியன் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது,” என்று நாஸ்காம் மூத்த துணை தலைவர் சங்கீதா குப்தா கூறினார்.

தில்லி-தேசிய தலைநகர் (என்.சி.ஆர்) பகுதியில் உள்ள 300 நிறுவனங்களின் சுமார் ஒரு மில்லியன் நேரடி மற்றும் மறைமுக பிபிஓ ஊழியர்களுக்கு  போக்குவரத்து சேவைகளை ஏறத்தாழ 15,000 டீசல் டாக்சிகள் வழங்குகின்றன .

டீசலிலிருந்து அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கு (சிஎன்ஜி) மாறுவதற்கு நாஸ்காமிற்கு  ஒரு ஒத்திவைக்கப்பட்ட காலவரிசை  தேவைப்படுகிறது அல்லது படிப்படியான செயல்முறை, ஊழியர்களை இரவில் கொண்டுவிட்டு அழைத்துச் செல்ல விதிவிலக்கு மற்றும் அந்த துறைக்கு வேலை செய்வதாக டாக்சிகளுக்கு அனுமதியின் ஒரு விவரக்குறிப்பும் வழங்கப்பட வேண்டுமென நாஸ்காம் விரும்புகிறது.

                         ராமன் ராய்

இந்த விஷயத்தை அடுத்த இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்றத்தை அணுக பி.பி.ஓ. துறை திட்டமிட்டுள்ளது. “எங்கள் துறையில் 38 சதவீதம் பெண் ஊழியர்கள் இருப்பதால், பாதுகாப்பு என்பது எப்போதும் எங்களுக்கு முக்கியமாக இருந்து வருகிறது. இரவு 8 மணிக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை அவர்கள் தங்குமிடத்தில் இறக்கிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். எந்த நம்பகமான பொது போக்குவரத்தும் இல்லாத நிலையில், இந்தச் சட்ட வழிகாட்டுதலுக்கு உடன்படுவது சாத்தியமற்றது”, என்று நாஸ்காம்(NASSCOM) துணைத் தலைவர் மற்றும் குவாட்ரோ குளோபல் சர்வீசஸ் நிர்வாக இயக்குனருமான ராமன் ராய் கூறினார்.

“ஒரு தொழிற்சாலையாக, நாங்கள் தான் ஒருவேளை சுத்தமான, குறைந்த மாசு ஏற்படுத்தி,  மிகவும் இணக்கமாக உள்ளோம். சிஎன்ஜி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைக்கான சிஎன்ஜி வாகனங்கள் கிடைத்தால், நாங்கள் துரிதமாக மாறலாம்,” என்று ஜென்பேக்ட் மூத்த துணைத் தலைவர் வித்யா சீனிவாசன் கூறினார்.

நாஸ்காம் பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளைச் சந்தித்து, கனரக தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள், தில்லி போலீஸ், மற்றும் தில்லி அரசு ஆகியவற்றிற்கு இப்பிரச்சினைக் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.

 

இந்த தடை தில்லி-என்.சி.ஆர் இல், 30,000 டீசல் டாக்சிகளை முடக்கியுள்ளது என்று புதன்கிழமையன்று டாக்ஸிகளை ஒருங்கிணைக்கும் ஓலா கூறியது.

“அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திடமிருந்து ஆய்வு கோரியுள்ளதைக் கண்டு நாங்கள் மகிழ்கிறோம்,” என்று ஓலாவின் சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பின் மூத்த இயக்குனர் ஆனந்த் சுப்ரமணியன் கூறினார்.

“தில்லி-என்.சி.ஆர் இல் 28,000 சிஎன்ஜி டாக்சிகள் இயங்குகின்றன. டீசல் வாகனங்களை இயக்கும் ஆயிரக்கணக்கான ஓட்டுனர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த தடை தொடர்ந்தால்  அவர்கள் வருவாய் ஆதாரத்தை இழக்க நேரிடும்,” என்று அவர் கூறினார்.

 

கார்ட்டூன் கேலரி