12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் – பகுதி 1

விக்கினம் தீர்ப்பவர் என்பதால் விக்னேஸ்வரர் என வணங்கப்படும் விநாயகர் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு  பலனை அளிப்பார்.  அதற்கேற்றபடி பக்தர்கள் வணங்க வேண்டிய கணபதியும் மாறுவார்.  இந்த பதிவில் எந்த ராசிக்காரர்கள் எந்த கணபதியை வணங்க வேண்டும் எனக் காண்போம்

முதல் 3 ராசிகளுக்கான கணபதியை இந்த முதல் பகுதியில் காண்போம்

மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்குச் சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோதைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் அம்பிகையின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமானவர்கள். 12 ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களுடைய ஜாதகத்தில் மட்டுமே. இயற்கையில் ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீ வித்யா கணபதி.

மிதுனம்: பல்வேறு திறமையை உடைய நீங்கள் கண் திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர்களின் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம்.

எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் கண் திருஷ்டி கணபதி.

 

நாளை அடுத்த 3 ராசிகளை பற்றி காண்போம்