அ.தி.மு.க. 140: தி.மு.க. 75 முன்னிலை

--

 

download

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு துவங்கியது. முதலில்  தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் வழக்கத்துக்கு மாறாக அ.தி.மு.க முன்னிலை வகித்தது.

பிறகு திமுக முன்னிலை வகித்தது.  இது இரு கட்சிகளுக்கு இடையே மாறி மாறி லீடிங் மாற ஆரம்பித்தது.

ஆனால் தற்போதைய நிலவரப்படி அதிமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அக் கட்சி 140 இடங்களிலும், திமுக 75 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதுவரை  அதிமுக 42 சதவீத வாக்குகளும்,   திமுக 29 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.   தேமுதிக  2.3 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.

ஆகவே அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.