புனே:

 

நிதி ஆயோக் டிஜிட்டல் பரிவர்த்தனை புரட்சி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் பரிவர்த்தனையின் அளவு மற்றும் மதிப்பு 23 மடங்கு அதிகரித்துள்ளது. 63 லட்சத்து 80 ஆயிரம் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் 2 ஆயிரத்து 425 கோடி ரூபாய் மதிப்பு பரிமாற்றம் நடந்துள்ளது.

இதே கடந்த நவம்பர் மாத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் டிஜிட்டர் பரிவர்த்தனை மூலம் 101 கோடி ரூபாய்க்கு பரிமாற்றம் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்ததை தகவல்களில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான மொத்த பரிமாற்றத்தின் ஆதாயம் 1.43 முறை மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து நிதி ஆயோக் அறிக்கையின் ஆலோசகர் அனாராய் கூறுகையில், “நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ)அளித்த எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. பரிமாற்ற எண்ணிக்கை அதிகமாக உள்ள போதும் ஆதாயம் குறைவாக இருப்பது உண்மை தான்” என்றார்.

யுனைடெட் பேமன்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) மூலம் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. ஆனால் ஆதாய மதிப்புக்கு அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் சிஇஒ அமிதாப் காந்த் கூறுகையில், இந்த எண்ணிக்கை வருமான வரித்துறை மூலம் இரண்டு முறை சோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக இந்த அமைப்பின் குழு உறுப்பினர் ஒரு கூறுகையில்,“ அச்சுப் பிழை காரணமாக இந்த தவறு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். பணமதிப்பிழப்புக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது குறைவாக தான் இருக்கிறது. கார்டு ஸ்வைப்பிங், வால் பயன்பாடு உள்ளிட்டவை டிஜிட்டல் பரிவர்த்தனையாக கருதப்பட்டுள்ளது.

யுபிஐ.க்கு அளித்த புள்ளிவிபரங்கள் அனைத்தும் சரியானது தான் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது. யுபிஐ வளர்ச்சி மட்டுமின்ற என்பிசிஐ வசம் உள்ள அனைத்து அமசங்களும் வளர்ச்சியை காட்டுகிறது. பணமதிப்பிழப்பு பின் 2 மடங்கு மட்டுமே டஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்திருப்பதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது. அதோடு நாட்டின் பொருளாதார முறையில் உள்ள அனைத்து டஜிட்டல் பரிவர்த்தனைகளையும் இந்த புள்ளிவிபரங்கள் பிரதிபலிக்காது என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது.

செக், உடனடி பண பட்டுவாடா, தேசிய தானியங்கி கிளியரிங் மையம், யுபிஐ, போன்றவவை வங்கிகள் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பருக்கு பின் அதிகரித்த டிஜிட்டல் பரிவர்த்தனை ஜனவரி, பிப்ரவரியில் சரிவை சந்தித்தது. பின் மார்ச்சில் மீண்டும் அதிகரித்தது. மார்ச் ஆண்டு இறுதி என்பதால் தனிநபர் வரி செலுத்துதல், முதலீடுகள் அதிகரித்தது தான் ஆதாய அதிகரிப்புக்கு காரணம். இந்த ஆதாயம் ஏப்ரலிலும் தொடர்கிறதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

“நாங்கள் ஒவ்வொரு மாதமும் இதை கண்காணித்து தான் வருகிறோம். 23 மடங்கு உயர்ந் துள்ளது என்பது சற்று அதிகமாக தான் இருக்கிறது. இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியடைந்துவிட்டோம்” என்று ஃபின்டெக் தொழிற்சாலை வல்லுனர் ஒருவர் தெரிவித்தார்.