புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்தில், டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை செயல்பாடு 23% அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 3 முதல் ஜூலை 2 வரையிலான ஒரு மாத காலக்கட்டத்தில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 23% உயர்ந்துள்ளதாக நிதி தொழில்நுட்ப தளமான ‘ரேஸர்பே’ நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளும், கடந்த 101 நாட்களில், 12% குறைந்துள்ளது. ஆனால், இந்தநிலை நாடு முதல் ஊரங்கை சந்தித்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 23 வரையிலான காலத்தில், 30% என்ற அளவில் இருந்தது.
சரக்குப் போக்குவரத்து, ரியல் எஸ்டேட், உடல்நலப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஓரளவு இயல்பு நிலை திரும்பி வருகிறது. குடும்ப வருமானத்தில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, நுகர்வோர் பணம் செலுத்தும் முறை மாறிவிட்டது. பின்னர், பணம் செலுத்தும் கார்டுலெஸ் மாதத் தவணை மற்றும் சாதாரண மாத தவணைகள், முறையே, 290%, 178% மற்றும் 125% வளர்ச்சியுடன், விருப்பமான கட்டண முறைகளாக மாறியுள்ளன.
பணம் செலுத்த விரும்பும் முறைகளில், யுபிஐ சேவையானது 43% என்ற அளவில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. கார்டுகள் மூலமாக செலுத்துவது 40% என்ற அளவிலும், நெட்பேங்கிங் மூலமாக 10% என்ற அளவிலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.