வெளியானது சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ இரண்டாவது லுக்…..!

சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

அனகா, ஷிரின் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கும் இந்தப் படத்தில், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் காமெடியனாக யோகி பாபு இணைந்துள்ளார்..

படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது ‘டிக்கிலோனா’ படக்குழு. 3 நாட்களுக்கு சந்தானத்தின் 3 கதாபாத்திரத்தின் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி ‘டிக்கிலோனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு நேற்று வெளியிட்டது. சந்தானம் தனது ட்விட்டர் பதிவில் அதனை வெளியிட்டிருந்தார் .

இந்நிலையில் இன்று இரண்டாவது லுக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சந்தானம் ஆடையின்றி ஹாட் என்ற வாசகம் எழுதப்பட்ட தோசைக் கல்லுடன் தோன்றியுள்ளார். இதுவரை சந்தானம் நடித்து வெளியான போஸ்டர்களிலேயே இது வித்தியாசமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.