சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தின் ஏதும் சொல்லாதே பாடல் வெளியீடு…!

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம என்ற சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் யோகி என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் ஏதும் சொல்லாதே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா பாடிய இந்த பாடல் வரிகளை கு.கார்த்திக் எழுதியுள்ளார்.