சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பேச்சரா. இதன் ட்ரைலர் மற்றும் டைட்டில் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தில் பேச்சரா படத்தின் முதல் பாடலான டைட்டில் ட்ராக் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய இந்த பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தாரே கின் பாடல் வீடியோ வெளியாகியது.மோஹித் செளஹான் மற்றும் ஷ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளார். வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து மஸ்காரி பாடல் வீடியோ வெளியானது. சுனிதி சவுஹான் மற்றும் ஹ்ரிடே கட்டாணி பாடிய இந்த பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். நகைச்சுவையான இந்த பாடல் வீடியோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.