ந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் நடித்த கடைசி படம் ‘தில் பேச்சாரா’. வரும் ஜூலை 24-ந் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக நேற்று இதன் டிரெய்லர் யூடியூபில் வெளியானது. டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக வரவேற்பு பெற்று சாதனை படைத்துள்ளது.

யூடியூபில் வெளியான ஹாலிவுட் படம் ’அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ டிரெய்லர் 36 லட்சம் லைக்குகளைப் பெற்று நெம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தது. தற்போது ‘தில் பேச்சாரே’ அப்பட சாதனையை 24 மணி நேரத்திற்குள் முறியடித்தது. இதுவரை ‘தில் பேச்சாரா’ டிரெய்லர் 50 லட்சம் லைக்கு களுடன் பெற்று இரண்டரை கோடிக்கு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை முகேஷ் இயக்கி உள்ளார். சுஷாந்த் சிங் ஜோடியாக சஞ்சனா நடித்திருக்கிறார். சைப் அலி கான், சஞ்சனா நடித்தி ருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.