திவாகரனுக்கு  டிடிவி தினகரன் கண்டனம்

தஞ்சாவூர்:

சிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார் என்று திவாகரனுக்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே  சுவாமி மலையில் திவாகரன் சற்று முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

“சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை திவாகரன் என்மீது காண்பிக்கிறார். நான் குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரம், அவர்களுக்கு கட்டுப்பட முடியாது. கட்சி தொடர்பாக திவாகரனிடம் நான் பேசியது கிடையாது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியில் அண்ணா இல்லை என்று திவாகரன் கூறுவது காழ்ப்புணர்ச்சியால்தான். எம்.ஜி.ஆருக்கு எதிராக எஸ்.டி. சோமசுந்தரம், நமது கழகம் என்ற கட்சியைத் துவங்கியபோது, அதில் இணைந்து பணியாற்றியவர்தான் திவாகரன். அந்த கட்சி கொடியில் அண்ணா இல்லை.. கட்சிப் பெயரில் திராவிடம் இல்லை.

பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவை பார்க்காதவர் திவாகரன்.

சசிகலாவை பற்றி திவாகரன் எப்படி எல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும்.

உறவு என்பது வேறு, கட்சி என்பது வேறு, கட்சியை தனிநபராக ஆட்டிப்படைக்க நினைக்கிறார் திவாகரன்.

குடும்ப உறவை கடந்து, எனக்கும் திவாகரனுக்கும் இடையே அரசியல் உறவு கிடையாது. உறவினர்களிடம் அரசியல் பற்றி பேச முடியாது” என்று தினகரன் கூறினார்.