புதுச்சேரி : தினகரன் ஆதரவு எம் எல் ஏ க்கள் இடம் மாற்றம்…

புதுச்சேரி

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம் எல் ஏக்கள் இன்று மதியம் முதல் வேறு உல்லாச விடுதிக்கு மாற்றபடுகிறார்கள்.

அதிமுக வில் இரு அணிகள் இணைப்புக்குப் பின் மூன்றாவது அணியான தினகரனின் அணியை சேர்ந்த 18 எம் எல் ஏ க்கள் முதல்வர் பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கவர்னருக்கு மனு அளித்தனர்.   அதன் பிறகு அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் இருந்த விண்ட் ஃப்ளவர் ரிசார்ட் என்னும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.   அங்கு அவர்கள் விளையாடி பொழுதைப் போக்கும் புகைப்படங்கள் மீடியாவில் வெளியானது.

தற்போது வார இறுதி ஆதலால்,  ஏற்கனவே பலர் அந்த விடுதிகளில் தங்க பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர்.    அதனால் இந்த எம் எல் ஏக்கள்  இன்று பகல் 12 மணி வரையே இங்கு தங்க முடியும்,   இதனை நிர்வாகம் அறிவித்து அவர்களை காலி செய்யச் சொல்லி விட்டது.   அதனால் இந்த எம் எல் ஏக்கள் புதுச்சேரியில் உள்ள மற்றொரு சொகுசு ரிசார்டான தி சன்வே மேனோர் என்னும் இடத்துக்கு இன்று பகல் முதல் மாற்றப்படுகிறார்கள்.