அதிகாரிகளே ஏதாவது வைத்து எடுத்தால் தான் உண்டு.. தினகரன் காமெடி!

சென்னை:

னக்கு புதுவையில் சொந்தமான பண்ணை வீட்டில் அதிகாரிகளாக எதையாவது வைத்தால்தான் உண்டு என்று டிடிவி தினகரன் ரெய்டு குறித்து காமடி செய்துள்ளார்.

இன்று காலை முதல் சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 190 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.  அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் கோபூஜை செய்து வருகிறார் என்றும் அதே வீட்டில் ரெய்டு எனவும் செய்திகள் பரவி வருகின்றன.

 

இந்த நிலையில் தனது அடையாறு வீட்டில் ரெய்டு நடக்கவே இல்லை என்று தினகரன் மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”எனது அடையாறு வீட்டில் எந்த  ரெய்டும் நடக்கவில்லை. புதுவை ஆரோவில்லில் உள்ள எனது பண்ணை வீட்டில் ரெய்டு நடக்கிறது. பண்ணை வீட்டை பராமரிக்கும் இரு பணியாளர்களும் படிப்பறிவில்லாதவர்கள். அதனால் அவர்களை அதிகாரிகளிடம் அவர்கள் ஏமாறக்கூடும் என்பதால் எனது வழக்கறிஞரையும், நண்பர்களையும், கட்சி பிரமுகர்கள் சிலரையும் அங்கு அனுப்பியுள்ளேன். அங்கு எதற்கு ரெய்டு நடக்கிறது என்று புரியவில்லை. அங்கு அதிகபட்சம் சாணியும், உரமும்தான் கிடைக்கும். படிப்பறிவில்லாத எனது பணியாளர்களை ஏமாற்றி அதிகாரிகளாகவே எதையாவது வைத்து விட்டு எடுத்தால்தான் உண்டு.

வருமான வரி சோதனை நடைபெறும் போது ஜெயா டிவியில் என் பேட்டியை ஒளிபரப்ப வருமானவரித் துறை தடை விதித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.   பச்சைமுத்து வீட்டில் ரெய்டு நடந்தபோது அவரது தொலைக்காட்சியில் அவரது பேட்டியை ஒளிபரப்பி உள்ளது.  ஆனால் என் போட்டியை எதற்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பக்கூடாது?

இந்த சோதனை மூலம் மத்திய அரசு எங்களை மிரட்டுகிறது.   ஜெயா டிவியில் நடக்கும் சோதனைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே காரணம்” என கூறி உள்ளார்