சசிகலா – தினகரன் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து வருகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, கட்சி சின்னத்தைப் பெறுவதற்காக  லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கும் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தற்போது சந்தித்து வருகிறார்.

ஜாமீனில் வெளிவந்த பிறகு, டிடிவி தினகரன், சசிகலாவை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்.

You may have missed