சசிகலா – தினகரன் சந்திப்பு : தனிக்கட்சி குறித்து முக்கிய ஆலோசனை?

பெங்களூரு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    மேலும் அவர் மௌன விரதம் இருப்பதாகவும் அதனால் அவரை யாரும் சந்திப்பது இல்லை எனவும் சொல்லப்பட்டு வந்தது.  இந்நிலையில் டி டி வி தினகரன் அவரைச் சந்தித்துள்ளார்.

ஆர் கே நகரில் சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரன் புதுக் கட்சி அமைக்கப் போவதாகவும் அதே நேரத்தில் அவர் கட்சி தொடங்கப் போவது இல்லை எனவும் மாறி மாறி செய்திகள் வந்த வன்ணம் உள்ளன.   இந்நிலையில் தினகரன் – சசிகலா சந்திப்பு பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

நடைபெற உள்ள தமிழக் உள்ளாட்சி தேர்தலிலும் தனது அணி வெற்றி பெற தினகரன் கடும் முயற்சி எடுத்து வருகிறார்.    எனவே இது குறித்து சசிகலாவுடன் அவர் ஆலோசனை நடத்தவே இந்த சந்திப்பு என அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தனிக் கட்சி தொடங்குவது பற்றியும் அல்லது புதிய பேரவை ஒன்றை அமைப்பது பற்றியும் அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன