ஆர் கே நகரில் எங்கள் அணிக்கும் திமுகவுக்கும் தான் போட்டி : தினகரன் அதிரடி

--

பெங்களூரு

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தங்கள் அணிக்கும் திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.  அவரை சந்திக்க டிடிவி தினகரன் பெங்களூரு சென்றுள்ளார்.  அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

அப்போது தினகரன், “வரப்போகும் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் மட்டுமே போட்டி நடக்கிறது.   எம் ஜி ஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தற்போது துரோகிகளின் கைகளுக்குள் உள்ளது.  அதனால் துரோகிகளுக்கு மக்கள் வாக்களிக்காமல் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள்.  எனவே இரட்டை இலையை மீட்கவே நாங்கள் தற்போது இரட்டை இலையை எதிர்க்கிறோம்.” எனக் கூறி உள்ளார்.