சென்னை:

டிகர் விஷால் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இரு நாட்களுக்கு முன்  நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி திருமணம் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த திருமணத்துக்கு டிடிவி தினகரனால் செல்ல முடியவில்லை.

ஆகவே இன்று விஷால் வீட்டுக்குச் சென்ற தினகரன், மணமக்களை வாழ்த்தினார்.  அவரை நடிகர் விஷால் உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றார்.

சற்று நேரம் விஷால் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த தினகரன், பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “வெளியூரில் இருந்ததால் விஷால் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. ஆகவே இன்று வாழ்த்துச் சொல்ல வந்தேன்” என்றார்.

மேலும் ஒரு கேள்விக்கு, ”சகோதரர் விஷாலுக்கு தலைமைப் பண்பு இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்,” என்று தினகரன் தெரிவித்தார்.