இரட்டை இலை சின்னம் தொண்டர்களுக்கே, அடிமைகளுக்காக அல்ல : தினகரன் அதிரடிக் கருத்து
சென்னை
டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னம் தொண்டர்களுக்கே, அடிமைகளுக்கு அல்ல என கருத்து கூறி உள்ளார்.
சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தனது அணி சார்பாக தானே வேட்புமனுவை நேற்று டி டி வி தினகரன் தாக்கல் செய்தார். அப்போது அவர் தரப்பினர் அண்ணாதுரை படம் பொறிக்காத கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறம் கொண்ட கொடியை பயன்படுத்தி உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார்.
அப்போது அவர், “இரட்டை இலை சின்னம் என்பது அதிமுகவின் தொண்டர்களின் சின்னம். அது அவர்களிடம் தான் இருக்க வேண்டும். அது அடிமைகளுக்கான சின்னம் அல்ல. அதனால் அது அடிமைகளிடம் இருக்கக் கூடாது. தொப்பி சின்னம் வழங்குமாறு நான் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளேன்.” என தெரிவித்தார்.