தினகரன் இலை லஞ்ச வழக்கில் மேலும் 3 பேருக்கு டில்லி போலீஸ் சம்மன்

--

சென்னை,

ரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்கக்கோரி ரூ.50 கோடி, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நேற்று முதல் சென்னையில் டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

டில்லி போலீசார் இன்று சென்னையில் 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மன்னார்குடியை சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை  ஊழியர் மோகன் வீடு மற்றும், கொளப்பாக்கத்தில் வசிக்கும், தனியார் தொலைதொடர்பு நிறுவன மேலாளர் பிலிப்ஸ் டேனியல் , திருவேற்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கோபி ஆகியோர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனடர்,

விசாரணையின்போது குறிப்பிட்ட நபர்கள் வீட்டில் இல்லாதால், அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.

இதன் காரணமாக அவர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.