தினகரன் ஆதரவாளர்கள் இப்போதே பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சென்னை

ர் கே நகர் தேர்தல் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தை துவக்கி உள்ளனர்.

சென்னை ஆர் கே நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்று வருகிறது.    மொத்தம் உள்ள 19 சுற்றுக்களில் 2 சுற்றுக்கள் மட்டுமே முடிவுற்ற நிலையில் தற்போது தினகரன் 10421 வாக்குகள் பெற்று சுமார் 6ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முதல் இடத்தில் உள்ளார்.

சென்னை அடையாரில் உள்ள தினகரன் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர்கள் தற்போதே வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.