தினகரனின் பிரஷர் குக்கர் காயலாங் கடைக்கு தான் போகும்….அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை:

டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக பழைய  இரும்புக் கடைக்குதான் போகும் என் அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 21ம் ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு, பிரஷர் குக்கர் பிரஷர் கொடுக்கும் என கூறப்படுகிறதே என கேள்வி எழுப்பட்டது.

அதற்கு ஜெயக்குமார் பதில் கூறுகையில், ‘‘டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக  பழைய  இரும்புக் கடைக்குதான் போகும்’’ என்றார்.