தினகரன் ஆதரவாளர்கள் எங்கள் அணிக்கு வாருங்கள்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அழைப்பு

சென்னை:

தினகரனை நம்பியுள்ள ஆதரவாளர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் இணைய வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அழைப்பு  விடுத்துள்ளார்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,  டிடிவி தினகரன் மீது கடுமையாக சாடினார்.

அப்போது,  18 எம்.எல்.ஏக்களை மக்கள் பணியாற்ற விடாமல் தினகரன் துரோகம் செய்துவிட்டார் என்றார். மேலும், எம்எல்ஏக்களின்  தொகுதி நற்பணிகளை கெடுத்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

இனிமேலும் அதிமுகவினர் யாரும் டிடிவியை நம்பி அவரது அணியில்  இருக்க வேண்டாம் என்றும், உடனே ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்த எங்கள் அணிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.