தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி  சுப்பலட்சுமி மறைவு

 

சென்னை:

தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி சுப்பலட்சுமி இன்று (21 ம் தேதி) அதிகாலை 03:20 மணிக்கு காலமானார். அவருக்கு  வயது 78.

முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் இல்லாமல் இருந்த அவர், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சுப்பலட்சுமி, 1939-ம் வருடம் அக்டோபர் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பால மார்த்தாண்டபுரத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிவராமகிருஷ்ணன்- விசாலாட்சி.

இவருக்கு கிருஷ்ணவேணி நடராஜமூர்த்தி,  ஷியாமளா ருத்திரகுமார்.  ஆகிய இரு மகள்களும்,  ராமசுப்பு ஆதிமூலம் ஆகிய மகன்களும் உண்டு.

அன்னாரது இறுதிச் சடங்குகள் மதுரையில் நாளை(22ம் தேதி), வெள்ளிக்கிழமை, 27, சத்ய சாய் நகரில் நடைபெற இருக்கறது.

(படம் நன்றி: தினமலர்)

 

You may have missed