“விமானங்கள் மூலம் மின்கம்பங்கள் நட வேண்டும்”- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் புதிய ஐடியா!

--

கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் புதிய மின்கம்பங்களை விமானங்கள் மூலம் நட வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசம் புதிய ஐடியா ஒன்றை தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த ஐடியாவை தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய சயிண்டிஸ்ட் கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

dindigul

வண்டரில் உருவான கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு நூறு கிலோ மீட்டருக்கு மேலாக காற்று அடித்ததால் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்கம்பங்களை சீரமைக்கவும், மின் விநியோகத்தை மீண்டும் தொடரவும் இரவுப் பகலான ஊழியர்கள் பயணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புயலால் பாதிகப்பட்ட மாவட்டங்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உள்ளிடோர் பார்வையிட்டனர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன் ” மின் கம்பங்களை விமானங்கள் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்றார். இதை கேட்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன் அதெல்லாம் சாத்தியமில்லை என்று கூறியும், தனது கருத்தை மாற்றிக் கொள்ளாத திண்டுக்கல் சீனிவசன் “ வெளிநாட்டில் கடலில் பாலம் போடுகிறார்கள், கடலுகடியில் நகரம் அமைக்கிறார், நம்மால் ஏன் விமானம் மூலம் மின்கம்பம் நடமுடியாது? உடனே இதற்கான கண்டுப்பிடிப்பை கண்டுப்பிடியுங்கள் “ என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விமானம் மூலம் மின் கம்பம் நட வேண்டுமென அமைச்சர் கூறியதை அடுத்து, தமிழகத்திற்கு புதிய சயிண்டிஸ்ட் கிடைத்து விட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதேபோல் கடந்த வருடம் வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தண்ணீர் மீது அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாக்கோல் வைத்ததும், அடுத்த நொடியே அந்த தெர்மாக்கோல் காற்றில் பறந்ததும் சீனா வரை உள்ள ஊடகங்களில் கேளிக்கைக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.