ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் : திண்டுக்கல் சீனிவாசன்..

துரை

ஜெயலலித மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டதாக தாம் பொய் கூறியதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உரையாற்றினார்.

அவர், “ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் நாங்கள் யாருமே அவரை பார்க்கவில்லை.  பார்க்க சென்ற எங்களை சசிகலாவும் அவர் குடும்பத்தினரும் அனுமதிக்கவில்லை.  ஆனால் ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் பொய் சொல்லி விட்டோம்.  இப்போது அதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.

விரைவில் விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் போது ஜெயலலிதாவை சந்திக்க எங்களை சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்காத காரணம் வெளியே வரும்.” என கூறி உள்ளார்.