திண்டுக்கல்

ரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கரகாட்டம் ஆடி வந்து ஆட்சியரிடம் நிவாரணம் கோரி மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தின் பழம்பெரும் கலைகளான கரகாட்டம், தப்பட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.  கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள ஊரடங்கால் இவர்களது தொழிலும் முடக்கம் கண்டுள்ளது.   இதனால் வாழ்வாதாரம் இழந்து இவர்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.

வழக்கமாக, மார்ச் முதல் மே வரையிலான கால கட்டங்களில் இங்கு எராளமான   திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும்.  தற்போது அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.  இதனால் இவர்களுக்குச் சிறிதளவும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.   கலைஞர்களில்  பலர் உணவுக்கும் வழியின்றி தவித்து வருகின்றனர்.

எனவே இவர்கள் அனைவரும் தங்களுக்கு நிவாரணம் கோரி இன்று திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் நேரில் மனு அளித்தனர்.  அதற்கு இவர்கள்  தாரை தப்பு மேளத்துடன் கரகாட்டம் ஆடிச் சென்று மனு அளித்துள்ளனர்.  இவர்கள் தங்கல் மனுவில் தங்களுக்கு அரசு நிதி மற்றும் உணவுப் பொருட்கள் தேவை எனவும் துக்க நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள தப்பாட்ட கலைஞர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.