கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம்: காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

பெங்களூரு :

ர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவராக தினேஷ் குண்டுராவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி நியமித்துள்ளார்.

தற்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர் பரமேஸ்வரராவுக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட் டதை தொடர்ந்து, கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவராக  தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக ஈஸ்வர் கந்ரே நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நியமனங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியுடன் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அசோக்  கெலட் தெரிவித்து உள்ளார்.

தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குண்டுராவ் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டு ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.