அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா நியமனம்!

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

harsh

தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்து வரும் நவ்தேஜ் சிங் சர்னா ஓய்வு பெற உள்ளார். இதை அடுத்து அமெரிக்காவுக்கான அடுத்த இந்திய தூதராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்ளாவை நியமித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கூடிய விரைவில் தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் “ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1984ம் ஆண்டு முதல் வெளியுறவு சேவைகள் அதிகாரியாக பதவி ஏற்ற ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்ளா தற்போது வங்கதேசத்திற்கன தூதராக பணியாற்றி வருகிறார். இவர் அமெரிக்காவிற்கான தூதராக மாற்றப்பட்ட நிலையில், அவர் வகித்த வங்கதேசத்திற்கான தூதரக பதவிக்கு மூத்த அதிகாரியான ரிவா கங்குலி தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-