தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:
தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் மெகா பிரசாரம் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 75 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த பிரச்சாரத்தில் மொத்தம் 1,500 பொதுக்கூட்டங்களில் 15 திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பிரசாரம் செய்கின்றனர்.

இந்த நிலையில், தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு திமுக  தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தமிழக மக்கள் கொடுத்த அடியை விட சட்டமன்ற தேர்தலில் பலமான அடியை தருவார்கள் என்றும், தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு 2021 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.