சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருவதாகவும், ரூ.280 கோடி ஊழல் புகார் குறித்து மின்னஞ்சலில் புகார் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விசாரணை ஆணைய நீதிபதி நீதிபதி கலையரசன், இந்த புகார்கள் தொடர்பாக  சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரான சூரப்பா  விதியைமீறி  அவரது மகள் உள்பட பலருக்கு பணி வழங்கியதாகவும்,  மேலும் பல பணி நியமனங்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாகவும்  புகார்கள் குவிந்துள்ளது. ரூ.280 கோடி அளவுக்கு அவர்  ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து,  சூரப்பா மீதான  புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தமிழக உயர்கல்வித் துறையால் நியமிக்கப்பட்டார்.  அவருக்கு உதவும் வகையில், மேலும் 13 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, சூரப்பா மீதான புகார்கள் குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ, கடிதம் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ புகார் கொடுக்கலாம் என விசாரணை ஆணைய நீதிபதி  அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஏராளமான புகார்கள் குவிந்து வருவதாக நீதிபதி கலையரசன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய  விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி கலையரசன்,  கலையரசன் , மின்னஞ்சலில் சூரப்பா மீது  ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அந்த  புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்படும், அதில் முகாந்திரம் இருந்தால் புகார் கொடுத்தவர்களை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்கப்படும் . மேலும்,  அடுத்த வாரம் முதல்,  சூரப்பா மீது ஊழல் புகார் தெரிவித்தவர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம்  தனித்தனியாக அவர்களிடம்  விசாரணை நடத்தப்படும். அதைத்தொடர்ந்து,  துணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.