10வது முடித்தவர்கள் நேரடியாக பிளஸ்2 தேர்வு எழுதும் திட்டம் ரத்து: பள்ளிக்கல்வித் துறை

சென்னை:

10வது வகுப்பு முடித்தவர்கள் பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக பிளஸ்2 தேர்வு எழுதும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

தமிழக கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வரும் தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது தமிழ்வழியில் படித்து வரும் மாணவ மாணவி களை ஊக்கப்படுத்தும் வகையில்  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு  மாணவ மாணவிகளுக்கு  கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

மேலும் நீட் கோச்சிங், ஐஏஎஸ் கோச்சிங் என தேசிய தேர்வுகளை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்றுத்தர பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே அமலில் இருந்து வந்த  10வது வகுப்பு தேர்வானவர்கள் நேரடியாக பிளஸ்-2 தேர்வு எழுதலாம் என்ற முறையை தற்போது பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்து அறிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு முதல் 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள நிலையில், நேரடியாக 12வது வகுப்பு தேர்வு எழுதுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 10வது வகுப்பு முடித்தவர்கள் இனிமேல் 11ம் வகுப்பு படிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

இந்த அறிவிப்பு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டு உள்ளார்.