நிதியாண்டு முடிவதற்குள் 15% வரியை அதிரடியாக வசூலிக்க வேண்டும்: வருமான வரித்துறைக்கு நேரடி வரிவிதிப்பு மத்திய வாரியம் உத்தரவு

--

புதுடெல்லி:

நிதியாண்டு முடிய குறைவான காலம் இருப்பதால், மீதமுள்ள 15 சதவீத வருமான வரியை அதிரடி நடவடிக்கைகள் மூலம் வசூலிக்குமாறு, வருமான வரித்துறையினருக்கு நேரடி வரிவிதிப்பு மத்திய வாரியம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, வருமான வரித்துறையின் அனைத்து மண்டல தலைவர்களுக்கு கடந்த 26-ம் தேதி நேரடி வரிவிதிப்பு மத்திய வாரிய உறுப்பினர் நீனா குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்விவரம்:

வருமானவரித்துறை 12 லட்சம் கோடி வருமான வரி இலக்காக பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 10,21,251 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. அதாவது 85.1% மட்டுமே வசூலாகியுள்ளது.

இது மிகவும் அபாயகரமானது. இது குறித்து உடனே கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நிலுவை வரி மற்றும் தற்போதைய வரியை வசூலித்து இலக்கை எட்ட வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

You may have missed