நேரடி வரி வசூல் உயர்வை விட நிறுவன வரி வசூல் குறைவு

டில்லி

டந்த கணக்கு ஆண்டில் நேரடி வரி வசூல் 6.6% உயர்ந்துள்ள நிலையில் நிறுவன வரி வசூல் 1% மட்டுமே உயர்ந்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கையும் வரி வசூலும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   மேலும் இந்த வசூல் ஆண்டுக்கு ஆண்டு மேலும் அதிகரிக்கும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.   கடந்த மாதம் 31 ஆம் தேதி உடன் வருமான வரி கணக்கு தாக்கல் முடிவடைந்தது.

இந்த கணக்குகள் குறித்த விவரங்களை அரசு கணக்கு தணிக்கை அலுவலக்ம வெளியிட்டுள்ளது.   அந்த விவரங்களின்படி நேரடியாக விதிக்கப்படும் வரி வசூல் குறிப்பிட்ட அளவு உயரவில்லை எனக் கூறப்படுகிறது.   இந்த வருட நேரடி வரி வசூல் 14.4% உயரும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அது 6.6% ஆக மட்டுமே உயர்ந்துள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வருட நேரடி  வரி வசூல் சுமார் 0.6% மட்டுமே உயர்ந்துள்ளது.    சென்ற ஆண்டு 6% உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.   அதே போல் முன் கூட்டி வருமான வரி (ADVANCE INCOME TAX)  செலுத்துவதில் சென்ற வருட வசூலை விட இந்த வருடம் குறைவாகி உள்ளது.

நிறுவன வரிகள் இந்த வருடம் சுமார் 10.15 அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வெறும் 1% மட்டுமே அதிகரித்துள்ளது.    அதே போல் நிறுவனங்களின் இந்த வருட் காலாண்டில் முன் கூட்டி செலுத்தும் வரியும் சுமார் 0.57% மட்டுமே அதிகரித்துள்ளது.

இந்த நேரடி வரிகளில் பெருமளவு திரும்ப அளிக்கப்பட்டு விட்டதால் இந்த வரி வசூல் குறைந்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.    குறிப்பாக வருமான வரி திரும்ப அளிப்பது அதிகரிக்கும் போது அது அடுத்த வருட முன் கூட்டி வரி செலுத்துவதில் எதிரொலித்து அது வெகுவாக குறையும்.

அரசு வரி வசூல் பற்றி கணக்கிடும் போது இதை கருத்தில் கொள்ளவில்லை எனவும் பொருளாதார வல்லுனர்கள் குறை  கூறி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி