டில்லி

ரசின் நேரடி வரி விதிப்பு வருமான இலக்கான ரூ. 12 லட்சம் கோடி இந்த வருடம் கிடைக்காது என கூறப்படுகிறது.

இந்த வருட இடைக்கால நிதி நிலை அறிக்கையில் நேரடி வரி வருமானமாக ரூ. 12 லட்சம் கோடிக்கு இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கபட்டது. அத்துடன் நிதி நிலை அறிக்கையிலும் பற்றாக்குறை காணப்பட்டது. முதலில் ரூ.11.5 லட்சம் கோடி நேரடி வரி வருமானமாக இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அதனுடன் ரூ.50,000 கோடி சேர்க்கப்பட்டு ரூ. 12 லட்சம் கோடியாக மாற்றப்படது.

கடந்த வாரம் பொருளாதார செயலர் சுபாஷ் சந்திர கர்க் நேரடி வரி வருமானத்தில் மாறுதல் இருக்காது எனவும் மறைமுக வரி வருமானம் மட்டுமே குறையும் என கூறி இருந்தார். இந்நிலையில் நிதித்துறையை சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கர்க் கூறியதற்கு நேர் மாறாக கூறி உள்ளார்.

அந்த அதிகாரி, “முதலில் 11.5 லட்சம் கோடி நேரடி வரி வருமானம் வரும் என நிதி அறிக்கையில் சொல்லப்பட இருந்தது. ஆனால் பற்றாக்குறையை சமாளிக்க இது ரூ. 12 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது முதலில் கூறப்பட்ட ரூ.11.5 லட்சம் கோடியையும் நேரடி வரி வருமானம் கூட எட்ட வாய்ப்பு கிடையாது” என கூறி உள்ளார்.

எனவே நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் இரண்டுமே குறைய வாய்ப்புள்ளதால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.