‘கோப்ரா’ குறித்த வதந்திக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து முற்றுப்புள்ளி….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இன்று (மே 11) முதல் திரைத்துறையில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், பல்வேறு படத்தின் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனால் ‘கோப்ரா’ படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, பாதியிலேயே திரும்பியது படக்குழு.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு முடிந்தாலும், மீண்டும் ரஷ்யாவுக்கு சென்று ஷூட் செய்வது கடினம் என்பதால் சென்னையிலேயே க்ரீன் மேட்டில் படமாக்கி கிராபிக்ஸ் செய்து கொள்ளலாம் என்று ‘கோப்ரா’ படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

அதற்கு அஜய் ஞானமுத்து “இல்லை… சாத்தியமில்லை” என்று பதிலளித்துள்ளார்.