நாட்டில் புழக்கத்தில் இருந்த  500, 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8ந் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கவே இந்த அதிரடி நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த அறிவிப்பு வெளிவந்த சிலமணி நேரங்களில் தனது ட்விட்டர் பக்கத்தில்  மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர்  ரஜினிகாந்த். ‘நரேந்திர மோடி அவர்களுக்குப் பாராட்டுகள். புதிய இந்தியா பிறந்துள்ளது. ஜெய் ஹிந்த்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
ரஜினியின்த ட்விட்டுக்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்திருந்தார்.

அமீர் - ரஜினி ( கோப்பு படம்)
அமீர் – ரஜினி ( கோப்பு படம்)

இந்த நிலையில் திரைப்படஇயக்குநர் அமீர், ரஜினியை காட்டமாக விமர்சித்துள்ளார். “பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சி என ரஜினி எப்படி கூறுகிறார்?  கபாலி பட வருமானம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா? கபாலி படம் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதா? அந்த படத்தின் மொத்த வருமானம் எவ்வளவு என்று ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா ? எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத ரஜினி மோடியின் 500, 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தற்கு வரவேற்பு அளித்தது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
வழக்கம்போல் ரஜினி இதற்கு பதில் கூற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.