ஆர்.கே.நகரில் இயக்குனர் அமீர் போட்டி!!

சென்னை:

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இயக்குநர் அமீர் பேட்டியிடபோவதாக அறிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட போவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு திரைப்பட இயக்குனர் அமீர் பேட்டியளித்தார்.

அப்போது, ‘‘ விஷாலை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன்’’ என்று தெரிவித்தார். இதன் மூலம் ஆர்.கே. நகர் தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.