வர்மாபடத்தில் இருந்து விலகியது ஏன்? இயக்குநர் பாலா விளக்கம்!

டிகர் விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படம் மார்ச்சில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படம் கைவிடப்படுவதாகவும், படத்தை வேறு ஒரு இயக்குனர் கொண்டு மீண்டும் எடுக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

பிரபல டைரக்டரான பாலா  படத்தில் இருந்து நீக்கப்பட்டது  தமிழ் திரையுலக வரலாற்றில் முதன்முறை என்று விமர்சிக்கப்பட்டது. இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், படத்தில் இருந்து விலகியது குறித்து இயக்குனர் பாலா விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,  “தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டி ருக்கிறேன். படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் படத்துக்காக தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் அவர் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு மொழில் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைப்போட்ட திரைப்படத்தின் தமிழ் பதிப்பினை நடிகர் துருவ் நடிப்பில் தமிழில் வர்மா என்னும் பெயரில்  பி- ஸ்டூடியோஸ் (B Studios)  நிறுவனம் தயாரித்தது. விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக இரு தினங்களுக்கு முன்னர் படக்குழுவினர் அறிவித்தனர்.

தெலுங்கில் ஈ4 எண்டெய்ட்ன்மென்ட் (E4 Entertainment)  தயாரிக்க, இயங்குநர் சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். இப்படத்தினை தமிழில் வெளியிட விரும்பிய இந்நிறுவனம் இயக்குநர் பாலா தலைமையில் செயல்மடும் பி- ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தின் படி இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க தமிழில் வர்மா என்னும் பெயரில் உருவானது.

வெளியீடு வரை இத்திரைப்படம் வந்த நிலையில் தெலுங்கு பதிப்பில் இருந்து தமிழ் பதிப்பு வேறுபட்டிருப்பதாக கூறி வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனத்தார் தெரிவித்தனர். இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், பாலா அறிக்கை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.