தோனி பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். அது பல்வேறு விவாதங் களை கிளப்பிவிட்டிருக்கிறது. இந்தியில் வாரிசு நடிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்

கொடுக்கப்படுகிறது வெளிமாநில ஹீரோக் களுக்கு ஆதரவு காட்டாமல் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள் ளது. அது நிஜம் என்பதுபோல் பல நட்சத்தி ரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கே.பாக்யராஜும் அவரது மகன் நடிகருமான சாந்தனுவும் நேர்க்கு நேர் விவாதம் செய்தனர். இந்த விவகாரம் குறித்து பாகயராஜ் விளக்கமான பதில் அளித்தார். அதில் அவர் குறிப்பிடும்போது,’ஊர்க்காரர், சாதி, நண்பர், வாரிசு என்ற முறைகளில் சிலருக்கு ஆதரவு தருவது என்பது சினிமாவில் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி உதவுவது தவறு அல்ல. ஆனால் அந்த ஆதரவு மட்டுமே ஒரு நடிகரை நிலை நிறுத்திவிடும் என்று கூற முடியாது. முதல் பட வாய்ப்பு, படம் ரிலீஸானால் அதற்கு ஒப்பனிங் கிடைக் கலாம். அதன்பிறகு படங்கள் வருவதென்பது எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. எத்தனையோ வாரிசு நடிகர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நடிகர் சுஷாந்த்துக்கு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை கதையில் நடிக்கி றார் என்பதற்காக சந்தோஷப்பட்டவர்களும் இருப்பார்கள், பொறாமைப்பட்டவர்களும் இருப்பார்கள். இதுபோன்ற பிரச்னைகளை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும் அல்லது அவருக்கு உடனிருப்பவர்கள் யாராவது சொல்லி விளக்கி இருக்க வேண்டும். இதெல் லாம் இல்லாமல் சினிமா இருக்குமா என்பது தெரியாது, ஆனால் எல்ல பிரச்னை களையும் சுஷாந்த் எதிர்கொண்டிருக்க வேண்டும். எதிர்மறை எதிர்ப்புக்ளை தாங்கமுடியாமல் அவர் உச்சகட்ட முடிவை எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது’ என்றார்.
#
#Sushaath Sing Rajput #Dhoni Bio pic
#Star Kids ##Caste #Friendship
#கே.பாக்யராஜ் #சுஷாந்த்சிங் #தோனி பட வாய்ப்பால் பொறாமை