ரஜினியை எதிர்த்து போட்டி இடுவேன் : புதுக் கட்சி தொடங்கிய கவுதமன்

சென்னை

டிகர் ரஜினிகாந்தை எதிர்த்து போட்டியிடப்போவதாக புதுக் கட்சிய் தொடங்கி உள்ள இயக்குனர் கவுதமன் கூறி உள்ளார்.

கனவே கலையாதே என்னும் தமிழ்ப்படத்தின் மூலம் இயக்குனர் கவுதமன் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பிற்கு மகிழ்ச்சி என்னும் ஒரு படத்தில் நடித்துள்ளார். அத்துடன் மக்கள் தொலைக்காட்சிக்காக சந்தன கடத்தல் புகழ் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் வரலாற்றை தொடராக எடுத்திருந்தார்.

சமீப காலமாக அரசியலில் பல கருத்துக்களை தெரிவித்து வரும் கவுதமன் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கவுதமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அந்த சந்திப்பில் கவுதமன், “தமிழ் இனத்தை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளோம். பாஜகவின் தமிழகத்தில் இந்தி திணிப்பால் மக்கள் பாதிப்பு அடைதுள்ளனர். அதை எதிர்த்து கட்சி ஆரம்பித்துள்ளோம்.

எங்கள் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கை ஆகியவைகள் பொங்கலுக்கு பிறகு மாநாடு நடத்தி அறிவிக்க  உள்ளோம்.    நடிகர் ரஜினிகாந்த் கட்சியை தொடங்கி எந்த தொகுதியில் போட்டி இட்டாலும் அவரை எதிர்த்து நான் அந்தத் தொகுதியில் போட்டி இடுவேன்” என தெரிவித்துள்ளார்.