கொரோனா குமார்’ டைட்டில் டீஸர் வெளியிட்ட இயக்குனர்..

கொரோனா ஊரடங்கால் பலவித பிரச்னைகளை அனைத்து தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். இதை மையமாக வைத்து கொரோனா குமார் என்ற படம் உருவாக உள்ளது.


கோகுல் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி, நந்திதா நடித்த ’இதற்குதானே ஆசைப் பட்டாய்’ படத்தை இயக்கியவர். கொரோனா குமார்’ படத்துக்கு டைட்டில் டீஸர் உருவாகி இருக்கிறது. சிக்னேச்சர் மதுபாட்டிலை பேனாவால் தொட்டு கொரோனா குமார் என்று தலைப்பை ஸ்கிரிபட் பேப்பரில் எழுதும் இயக்குனர் பிறகு கையை மது ஊற்றி கழுவுகிறார். மற்றொரு மது பாட்டிலை காட்டி, ’இந்த ப்ளூ பாட்டில் சேனிடைசர் காலியாகிவிட்டது. அதை வாங்கி வா இன்று இரவு புல்லா போட்டு வேலையை முடிச்சிடுவோம். உலகம் புல்லா ரிலீஸ் செய்வோம்’ என்றபடி டீஸர் ஓடுகிறது.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சிலவற்றை அடிப்படையாக கொண்டு இதற்கான கதை வடிவமைக்கப்படுகிறது.