காவல்துறையை கண்டித்து  இயக்குநர் கவுதமன், ஆர்ப்பாட்டம்! கைது!

சென்னை,

காவல்துறையை கண்டித்து  ஆர்ப்பாட்டம் செய்த இயக்குநர் கவுதமன் செய்யப்பட்டார்.

கடந்த 23ந்தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து நடைபெற்ற வன்முறையில் மெரினா அருகிலுள்ள நடுக்குப்பம் மற்றும் மீனவ குப்பங்களில் போலீசார் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் காட்டுமீராண்டிதனமான  தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக உரிமைகளுக்கான அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் திரைப்பட இயக்குநர் கௌதமன், திருமுருகன் காந்தி, இயக்குநர் ராஜூமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

போராட்டத்தின் விளைவாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் உறுதிப்படுத்தபட வேண்டும். விலங்குகள் நலவாரியங்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும்.

காங்கேயம் காளையை இளைஞன் அடுக்குவது போன்ற சிலையை மெரினாவில் நிறுவ வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும்.

இறந்த 200 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும்.

தடியடி நடத்திய காவலர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையால்   கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

நதிநீர் ஒப்பதந்தங்களை மீறும் மாநிலங்களிடமிருந்து சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தை வஞ்சிக்கும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்.

கூடங்குளம், மீத்தேன், நியுட்ரினோ வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

கச்சதீவை திரும்ப பெற வேண்டும்.

முருகன்,சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டும்.

மேற்கண்ட 11 தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தின்போது நிறைவேற்றப்பட்டது.

இந்த  தீர்மானங்கள் குறித்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க போகிறோம் என்றார்.

பொய் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல் போராடுவோம் என்று கவுதமன் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கார்ட்டூன் கேலரி