இயக்குநர் கௌதமனுக்கு கொரோனா தொற்று…..!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் கௌதமன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தம்பி வ.கௌதமன் அவர்களும் அவரின் குடும்பத்தாரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விரைவில் மீண்டு நலம் பெற வாழ்த்துகிறேன்”, என பதிவிட்டுள்ளார்.