சென்னை:

ஜினி அரசியலுக்கு வந்தால்தான்  தமிழகத்துக்கு விமோச்சனம் கிடைக்கும் என்று ரஜினியின் சம்பந்தியும், மருமகன் தனுஷின் தந்தையுமான இயக்குனர் கஸ்தூரி ராஜா தெரிவித்து உள்ளார். இது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவேன் என்றும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் தெரிவித்து உள்ளவர்,   கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்களை உசுப்பேத்தி தனது படங்களை ஓட்டி வருகிறார்.  ஆனால், இன்றுவரை அவர் தனிக்கட்சி ஏதும் தொடங்காமல், பாரதிய ஜனதாவின் பிம்பரமாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துக்களை தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் போன்றோர் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், கராத்தே தியாகராஜன் அடுத்தவருடம் ரஜினி கட்சி தொடங்கப்போகிறார் என பேசி  பரபரப்பு ஏற்படுத்தினார்.

ஆனால், ரஜினி இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல், தனது வருமானத்தையே குறிக்கோளாக கொண்டு படங்களில் நடித்து வருகிறார். தற்போது  தார்பார் படத்தின் ஷீட்டிங் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் மருமகன்  தனுஷின் அப்பாவும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

தமிழகத்திற்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு விமோசனம்  கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி ராஜாவின் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என்ற கருத்து தமிழக அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கஸ்தூரி ராஜா,  அமித்ஷாவின்  ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்னும் இந்தி மொழி போன்றவைகள் குறித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.