ஸ்ரேயா நடிக்கும் 5 மொழிப்படம் கமனம்… ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியீடு..

சிவாஜி. அழகிய தமிழ் மகன், மழை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப் பவர் ஸ்ரேயா சரண். இவர் நடித்துள்ள நரகாசூரன் படம் முடிந்து பைனான்ஸ் பிரச்னை காரணமாக திரைக்கு வராமல் உள்ளது.

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரேயா நடிக்கும் படம் கமனம். இயக்குனர் சுஜனா ராவ் டைரக்டு செய்கிறார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வு களும் இதன் கதை அமைக்கப்பட்டி ருக்கிறது.
இப்படம் கமனம்” படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டடை பிரபல இயக்குனர் கிரிஷ் நடிகை ஸ்ரேயா சரணின் பிறந்த நாளில் வெளியிட்டார்.


இப்படத்துக்கு இளையராஜா இசைய மைக்கிறார்., பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள் ளார். ஞான சேகர் வி. எஸ். ஒளிப்பதி வை மேற்கொள்வதோடு ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத் தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

 

You may have missed