சென்னை:

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல் நலமில்லாமல் சென்னை அப்போலோ  மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று பரபரப்பாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், அவர் குறித்து வெளியான செய்தி வதந்தி என்றும், அவர் இன்று வழக்கம் போல் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உளளது.

இயக்குநர் மணிரத்னம் கடந்த 2015ம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றார். அதைத்தொடர்ந்து அவ்வப்போது உடல்நல பரிசோதனை செய்து வருகிறார்.

இந்த நிலையில்,  இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னணி இயக்குநரான  மணிரத்னம் தற்போது சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் படத்தை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இந்நிலையில் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மணிரத்தனம் நெஞ்ச வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றும், வழக்கமான உடற்பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று இரவே அவர் பரிசோதனை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும், தற்போது நலமுடன்  அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மணிரத்னத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக வெளியானது செய்த தவறு… வதந்தி என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.