லாரன்ஸ் ரசிகரின் செயல் : இயக்குனர் நவீன் காட்டம்

ஏப்ரல் 19-ம் தேதி வெளியான ‘காஞ்சனா 3’.அன்று, லாரன்ஸ் ரசிகர்கள் அவருடைய கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். அதிலும் ஒருவர் க்ரேன் கொக்கில் தொங்கிக் கொண்டு, கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீன் :-

“இது மிகவும் முட்டாள்தனமானது. லாரன்ஸ் மாஸ்டர்கள் அவர்களே, தயவு செய்து உங்கள் ரசிகர்களுக்கு புரிதலை ஏற்படுத்துங்கள்.

சமீபத்தில் தான் ஒரு சாமியார் விழுந்து இறந்தார். இவ்வாறு தொங்குகிற இந்த முட்டாளை நம்பி கண்டிப்பாக ஒரு குடும்பம் இருக்கு. அவர்களுக்கு யார் பொறுப்பேற்பது. இது போன்ற மூடத்தனத்தையும் முட்டாள் ரசிகர்களையும் வளர்ப்பதால் நடிகர்கள் வளரலாமே தவிர நாடு வளறாது.

இதை தடுப்பது சம்மந்தப்பட்ட நடிகர்களின் முக்கிய கடமையாக கருத வேண்டும். நீங்கள் மனிதநேயமிக்க நல்ல மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் இது” என்று தெரிவித்துள்ளார்.