நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் ( கோவிட் -19) படுவேகமாக பரவி உள்ள நிலையில், அப்படி வளர்ந்து வரும் ஹாட்ஸ்பாட்களை அடையாளம் கண்டு கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இதற்கான பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க pm cares Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் .

அதன் தொடர்ச்சியாக பல்வேறு தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் என நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் , “பிரதமர் நிதி ஏன் #PMCARES என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. குடிமக்களை பாரத்தைச் சுமக்கச் சொல்லிவிட்டு யெஸ் வங்கி போன்றவர்கள் எளிதாகத் தப்பிக்க விடவில்லையா? இதில் கேர் எங்கிருந்து வந்தது? குடிமக்களின் பங்களிப்பு எப்படி #pmcares ஆக முடியும்? இது எந்த வகையான கேர்?” என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் .