kathai_thiraikathai_vasanam_iyakkam_movie_working_stills_43ca84b
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது இந்த விழாவில் இயக்குநர் / நடிகர் பார்த்திபன் பேசியது :-
இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இதை எடுத்துகொள்ளலாம் “ நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தொடரி திரைப்படத்தில் 150km வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை “ என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகிறது. அந்த அளவுக்கு ரசிகர்கள் உன்னிப்பாக படத்தை கவணிக்கின்றனர் அதனால் நாம் ஒரு சின்ன தவறு செய்தால் கூட நம்மை கிழிக்க தயாராக உள்ளனர்.
யுகபாரதி நான் நன்றாக வசனம் பேசியுள்ளேன் என்று கூறினார். ஆனால் அந்த வசனம் நன்றாக இருந்ததனால் தான் என்னால் அந்த வசனத்தை நன்றாக கூற முடிந்தது. இயக்குநர் சுசீந்திரன் எப்போதும் கட்சிதமாக‌ படத்தை இயக்கும் ஓர் இயக்குநர். இயக்குநர் பிரபுதேவா ஒரு நாயகிக்கு நடனம் கற்று கொடுக்க இரண்டு நாள் , Perfectionனுக்கு 8 நாள் ஆகும் என்று கூறினார். அதே போல் Perfectionனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுசீந்திரன்.
இப்படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யா மிகச்சிறந்த நடிகை எனாலம் ஏனென்றால் நான் அழவேண்டிய காட்சியில் இயக்குநர் சுசீந்திரன் ஸ்ரீ திவ்யாவை Glycerine போடுமாறு கூறியதும் அவர் மறுப்பேதும் கூறமால் அக்காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முகம் பிரேமில் வராது என்று தெரிந்தும் நடித்தார். இவ்வாறு படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். இப்படத்துக்கு பின்னர் விஷ்ணு மகா விஷ்ணுவாக மாறிவிடுவார் என்றார்.