தயாரிப்பாளர்களுக்கு பலம் தந்த விநியோகஸ்தர்கள்.. இயக்குனர் பாரதிராஜா அறிக்கை..

மிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா இன்று விநியோகஸ்தர்களுக்கும் டி.ராஜேந்தருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்

அதில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சில முக்கிய மான பிரச்சனைகளைத் தீர்க்க திரையரங்க உரிமையாளர்களுக்கு தீர்மானமாக சுட்டிக் காட்டிய விதிமுறைகளுக்கு உடனடியான பலமளித்த சென்னை செங்கல்பட்டு, காஞ் சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோ கஸ்தர்கள் சங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். முக்கியமாக, டி ஆர்க்கும், மன்னனுக்கும் நன்றிகள்.
தயாரிப்பாளர்களின் வலி புரிந்திருப்பதால் தான் டி ஆர் தன் சங்க நண்பர்களுடன் இணைந்து அற்புதமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


வலி புரிந்து உடன் நிற்பதுதான் பலம். இன்றைய சினிமா நிலையை புரிந்து எங்களோடு பயணிக்க ஆதரவளித்த சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தீர்மானங்களுக்கும், தலைவர் டி. ஆருக்கும், செயலாளர் மன்னனுக்கும், மற்றும் அனைத்து விநியோகஸ்தர் களுக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும், அனைத்துத் தயாரிப்பாளர்கள் சார்பாகவும்
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க நண்பர்கள் சினிமாவின் எதிர்காலம் கருத்தில் கொண்டு, ஒற்றுமை யாக நின்று செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்திருக் கிறார்.